உள்ளூர் செய்திகள்

மகாபாரதத்தில் கந்தன்

வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். கந்தனின் பெருமைகளைக் குறிப்பிடும் பத்து அத்தியாயங்கள் வனபர்வத்தில் உள்ளன. மூவுலகத்திலும் புகழ் பெற்ற கந்தனைக் கண்டு பொறாமைப்பட்ட இந்திரன், வஜ்ராயுதத்தால் அவரை அடித்தான். அப்போது இருகூறாகப் பிளந்த, கந்தனின் வலப்பக்கத்தில் இருந்து விசாகன் என்ற புதிய கடவுள் தோன்றினார். இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் அழிக்க முடியாத கந்தனுக்கு தன் பதவியை வழங்கினான். ஆனால், கந்தன் பெருந்தன்மையோடு பதவியை ஏற்கவில்லை. தேவர்களின் சேனாதிபதியாக பதவியேற்றார். இதனால், கந்தனுக்கு 'தேவசேனாதிபதி' என்ற பெயர் ஏற்பட்டது.