உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி பூஜை

கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். அன்று வீட்டைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். இதைப் பார்க்கும்போது, சின்னக்கண்ணன் வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றும். கண்ணனின் விக்ரகம் அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, சந்தன, குங்குமம் இட வேண்டும். சீடை, முறுக்கு, வெண்ணெய், நெய் அப்பம் உள்ளிட்ட பண்டங்கள் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட வேண்டும். கோயில்களில் நடக்கும் உறியடி உற்சவத்தைத் தரிசிக்கவேண்டும். கண்ணனை பற்றிய துதிப்பாடல்களை ராகத்துடன் பாட வேண்டும்.