உள்ளூர் செய்திகள்

உப்பை குறைச்சா மழை வரும்

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்றொரு பழமொழி உண்டு. சுவைக்கு காரணமான உப்பை குறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்கிறது சாஸ்திரம். உப்புச்சத்து வந்தபின், உப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. சிறுவயதில் இருந்தே கார்த்திகை, சஷ்டி, பவுர்ணமி போன்ற விரத நாட்களில் உப்பு இல்லாமல் அல்லது குறைந்த அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதற்கு 'அலவண நியமம்' (உப்பில்லா கட்டுப்பாடு) என்று பெயர். 'லவணம்' என்பதற்கு 'உப்பு' என்பது பொருள். உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு வருண மந்திரம் ஜெபித்தால் மழை பெய்யும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.