உள்ளூர் செய்திகள்

மாணவனே கேள்!

சரஸ்வதி பூஜையை ஒட்டி மாணவர்களுக்கு வாரியார் சுவாமிகள் தரும் சுவையான சேதி: ''கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக,'' என்பது வள்ளுவர் வாக்கு. படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். படிப்பது எதற்கு? உத்தியோகம் செய்வதற்கு மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதற்கும் கூட. திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். வழுக்கி விழுந்தவள், வாழப்பிறந்தவள் போன்ற மோசமான கதைகளைப் படிக்கக்கூடாது. இனிமேலாவது, இதுமாதிரி உள்ள நல்ல நூல்களைப் படியுங்கள். படிப்பில்லாதவர்களும் பணம் சேர்க்கிறார்கள். உள்ளூர் பாங்கில் பணம் போட்டால் தெரிந்துவிடுமென்று வெளிநாட்டு பாங்கில் பணம் போடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வபக்தி இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல்துலக்கி, நெற்றிக்கு விபூதி இட்டு, இறைவனின் திருநாமத்தைச் சொன்னபின் தான் காபியே குடிக்க வேண்டும்''. வாரியார் சொன்னதை மனதில் வரித்துக் கொள்வீர்களா மாணவர்களே!