உள்ளூர் செய்திகள்

மடப்பள்ளி அன்னபூரணி

கோவில்களில் இருக்கும் மடப்பள்ளிகளுக்குள் சமையல் பாத்திரங்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் மடப்பள்ளியில், அன்ன பூரணியின் சிலை உள்ளது. அம்பாளே சுவாமிக்கு சமையல் செய்வதாக ஐதீகம். காசி சென்று அன்னபூரணியைத் தரிசிக்க முடியாதவர்கள் இந்த அம்பாளைத் தரிசித்து வரலாம். திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மடப்பள்ளியில் வகுளமாலிகா என்ற பெயரில் அவரது வளர்ப்பு தாய் அருள்பாலிக்கிறாள்.