ஆட்ட நாயகன்
UPDATED : டிச 19, 2021 | ADDED : டிச 19, 2021
முனிவர்களான வியாக்ர பாதர், பதஞ்சலி தில்லை வனமான சிதம்பரத்தில் தவமிருந்தனர். அவர்களுக்காக சிவன் இங்கு ஆனந்த தாண்டவம் ஆடினார். சிவன் அருகில் பார்வதியும் நின்று நடனத்தை ரசித்தாள். இதனால் 'சிவகாமி' என்ற பெயர் பெற்றாள். இதை விட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் 'நடராஜர்' எனப் பெயர் பெற்றார்.