ஆயுள் பெருகட்டும்
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரியன். அதனால் சூரியனுக்கு 'பிதுர்காரகர்' என்று பெயர். அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர் காரகரான சூரியனுக்கு இரு கைகளைச் சேர்த்து தண்ணீர் விடுவது நன்மை தரும். இதனை 'அர்க்கியம் விடுதல்' என்பர். புனித தீர்த்தங்களில் நீராடும் போது முழங்கால் அளவு தண்ணீரில் நின்றபடி சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம்(கைகளால் முகந்து கீழே விடுதல்) செய்தால் ஆயுள் பெருகும். உடல்நலம், ஆத்மபலம் ஏற்படும். தந்தை, மகன் உறவு பலம் பெறும்.