உள்ளூர் செய்திகள்

மெகா சைஸ் விநாயகர்

உலகிலேயே மிகப் பெரிய பிரம்மாண்ட விநாயகர் புனே- பெங்களூரு சாலையில் உள்ள தோசாப்பூர் கிராமத்தில் வீற்றிருக்கிறார். கோலாப்பூர் அருகே உள்ள இவருக்கு 'சின்மயா கணபதீஷ்' என்று பெயர். இவரது உயரம் 100 அடி, அகலம்60 அடி. கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட இச்சிலைக்கு 10ஆயிரம் சிமென்ட் மூடைகளும், 70டன் இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டது. 1996ல் துவங்கிய பணி 2001ல் நிறைவு பெற்றது. 4கி.மீ., தொலைவில் இருந்தே இவரைத் தரிசிக்க முடியும். இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்துநாகம் குடைபிடிக்க, அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.