உள்ளூர் செய்திகள்

திரட்டுப்பால் நைவேத்யம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் மார்கழி மாதத்தில் பகல்பத்து திருவிழா நடக்கும். இதன் முதல்நாள் ஆண்டாள் பெரியாழ்வார் வம்சாவளியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பர். இதனை, 'பச்சைப்பரத்தல்' என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யம் செய்யப்படும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் ஆண்டாளுக்கும் இதை நைவேத்யம் செய்கின்றனர்.