வாகனங்களுக்கு நைவேத்யம்
UPDATED : ஆக 12, 2011 | ADDED : ஆக 12, 2011
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பெருமாளுக்கு திருவமுது (நைவேத்யம்) செய்வதுடன், அவரைச் சுமக்கும் வாகனங்களுக்கும் திருவமுது செய்விக்கிறார்கள். உற்சவ நாட்களில் யானை வாகனத்துக்கு முழுக்கரும்பு, வாழைத்தார், குதிரை வாகனத்துக்கு சர்க்கரை பொங்கல் திருவமுது செய்விக்கப்படுகிறது. வாகனங்களுக்கு நிவேதனம் செய்வது அரிதான விஷயம்.