உள்ளூர் செய்திகள்

பெருமாள் அருகில் கருடாழ்வார்

பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் கருவறைக்கு எதிரில் அவரை வணங்கியபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்துாரில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இங்கு கருடனின் அம்சமாகவே பெரியாழ்வார் பிறந்ததாக ஐதீகம். இவர் தன் மகளான ஆண்டாளை கன்னிகாதானமாக பெருமாளுக்கு தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்று கொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் கருவறையில் மூலவருக்கு அருகிலேயே வீற்றிருக்கிறார்.