உள்ளூர் செய்திகள்

பெருமாளுக்கு அருகில்...

வைணவக்கோயில்களில் பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி அமைந்திருக்கும். ஸ்ரீவில்லிபுத்துாரில் மட்டும் கருவறையில் பெருமாளுக்கு அருகில் இருப்பார் என்பது கருடனுக்குரிய சிறப்பு. ஆடிப்பூர உற்ஸவத்தில் திருத்தங்கல் அப்பன், காட்டழகர் சுந்தர்ராஜ பெருமாள், திருமலைசீனிவாசன், வடபெருங்கோயிலுடையான், ரெங்கமன்னார் கருட வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் காட்சி தருவார்கள்.