காலாவதி கிடையாது
UPDATED : மார் 27, 2021 | ADDED : மார் 27, 2021
வெளிநாட்டவர் ஒருவர் பழநி மலை அடிவாரத்தில் ௨ பாக்கெட் திருநீறு வாங்கினார். அதற்காக 10 ரூபாய் கொடுத்த அவர் கடைக்காரரிடம், what is the expiry date? எனக் கேட்டார். அதற்கு கடைக்காரர் அமைதியுடன், 'இதற்கு காலாவதியே கிடையாது. தினமும் நெற்றியில் பூசினால் தங்களின் காலாவதி தேதி நீட்டிக்கப்படும்'' என்றார்.