உள்ளூர் செய்திகள்

ஓண சத்ய

 ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை "ஓண சத்ய' என்று குறிப்பிடுவர். இதற்கு "ஓண விருந்து' என்று பொருள். கேரள பகுதியில் உணவில் புட்டு, கிழங்கு, பயறு போன்றவை தான் வழக்கமாக இடம் பெற்றிருக்கும். ஓணத்தன்று அரிசி மாவில் அடை, அடை பிரதமன், அவியல், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என கேரளத்துக்கே உரித்தான உணவுகள் தயார் செய்யப்பட்டு, இஷ்ட தெய்வங்களுக்குப் படைத்து நண்பர்கள், உறவினர்களுடன் உண்பர்.