அம்மனுக்கு ஆபரணம்
UPDATED : நவ 12, 2017 | ADDED : நவ 12, 2017
சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்து அம்மனுக்கும் ஆபரணங்களை பெட்டியில் கொண்டு வருவர். ஐயப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகரஜோதி விழா முடிந்தபிறகு ஆறு நாட்கள், ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நாளில், ஐயப்பனை திருமணம் செய்யவேண்டி சரங்குத்தி வரை அம்மன் பவனி வருவாள்.