உள்ளூர் செய்திகள்

பெருமாள் திருமொழி

ஸ்ரீராமபிரான் ஒருவரையே மனதில் நிறுத்தி, அரசாட்சி செய்தவர்தான் குலசேகராழ்வார். ஸ்ரீராமபிரான் அவதரித்த நட்சத்திரமான புனர்பூசத்தில்தான் இவரும் பிறந்தார். ராமாயணக் கதையை யார் கூறினாலும், உருகிப்போய்விடுவார். உண்மையில் ராமபிரானை நினைப்பவர்கள் அனைவரும் நெகிழத்தான் செய்வார்கள். சில நேரங்களில் இவர் கொதித்து எழுந்து, தன் சேனைகளைத் திரட்டி ராவணனை அழிப்பதற்கு புறப்பட்டுவிடுவார். அவ்வளவு பக்தி. இதுபோல் இவர் மனம் உருகி பாடிய பாசுரங்களே, 'பெருமாள் திருமொழி' என்ற பெயரை பெற்றது.