உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் நாலு கலர் மாறும் பிள்ளையார்

கர்நாடகத்தில் பீஜப்பூர் அருகிலுள்ள பங்கூர் கிராம மலைப்பகுதியில் 12 அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் செய்து கொள்ளும் வேண்டுதல் வித்தியாசமானது. இங்குள்ள கிராம மக்கள், ''அப்பனே! விநாயகா! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று. உன் நிறத்தை மாற்றி வேறு நிறம் அடிக்கிறோம்,'' என்று வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் பிள்ளையாருக்கு விருப்பப்பட்ட வண்ணத்தை அடிக்கின்றனர். ஒரேநாளில் இரண்டிலிருந்து நான்குமுறை கூட இவ்விநாயகர் வண்ணம் மாறிவிடுகிறார்.