பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமை
UPDATED : அக் 20, 2017 | ADDED : அக் 20, 2017
முருக வழிபாடு முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக சிவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். பெற்றோரை உலகமாக கருதி வந்த விநாயகருக்கு ஞானப்பழத்தை கொடுத்தார் சிவன். இதனால் கோபம் அடைந்த முருகனும் பெற்றோரை பிரிந்து பழநி மலைக்கு எழுந்தருளினார். மகனின் பெருமையை உலகறியச் செய்ய, மந்திர நாயகனான சிவன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாதது போல் நடித்து உபதேசம் பெற்றார். குடும்பத்தில் பிள்ளைகளின் கருத்துக்கு, பெரியவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகுடும்பம் அமைந்தது