தொழில் லாபத்துக்கு பூஜை
UPDATED : அக் 21, 2011 | ADDED : அக் 21, 2011
ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக, தீபாவளியன்று லட்சுமி தேவியைப் பிரார்த்திப்பர். அன்று இரவில் மண் அகல்களில் விளக்கேற்றுவர். அமிர்தசரஸ் பொற்கோயிலில் தீபாவளி வழிபாடு சிறப்பாக நடக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான தீபங்களை ஒரே நேரத்தில் ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சி. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களைப் பாதுகாத்த கிருஷ்ணருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் உத்தரபிரதேச மக்கள். குறிப்பாக விவசாயிகள் கோவர்த்தன பூஜையைத் தீபாவளியன்று நடத்துவது வழக்கம்.