உள்ளூர் செய்திகள்

ராகு தரும் திடீர் அதிர்ஷ்டம்

தனுசு வீட்டில் இருக்கும் ராகு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பெயர்ச்சியின்போது ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அதனால் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ராகுவிற்குரிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சுபபலன்களை அள்ளித் தருவார். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணவரவு, வேலைவாய்ப்பு, அபரிமிதமான லாபம் கிடைக்கும். அதே போல, கேதுவின் நட்சத்திரங்களான அசுபதி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகள் அபரிமிதமாக உண்டாகும்.