ஏழரை, அஷ்டமம் இனி இல்லை
நம் பூர்வஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஏழரை, அஷ்டமச்சனி, ஜென்ம குரு காலங்களில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எத்தனை பரிகாரம் இருந்தாலும், 'கந்தர் அலங்காரம்' நூலில், உள்ள இந்தப் பாடலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், முருகனை வணங்கினால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.“நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்),சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.