எளிமையான சரஸ்வதிபூஜை
UPDATED : அக் 21, 2012 | ADDED : அக் 21, 2012
ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதிபடம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். புத்தகங்களை மேஜையில் அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன்னால் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வணங்க வேண்டும். குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அவரவர் வசதிக்கு தக்கபடி வழங்க வேண்டும். மறுநாள், காலையில் புதுஇலை இட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி மட்டும் படைத்து பூஜை செய்து படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும். பூஜா என்றே சொல்லே பூஜை ஆனது. 'பூ' என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது