வினை தீர பாடுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது சிறுமணவூர்கிராமம். இங்கு பிறந்த முனுசாமி என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய நுால்களுள் 'நடராஜப்பத்து' முக்கியமானது. இப்பத்து பாடல்களையும் நடராஜரின் சன்னதியில் திருவாதிரை, அவருக்குரிய அபிேஷக காலங்களில் படிப்பவர்களுக்கு பதினாறு செல்வங்களும் கிடைக்கும். நடராஜர் நாட்டியத்தால் இந்த உலகம் இயங்குகிறது என்பதை குறிக்கும் பாடல்.மானாட மழுவாட மதியாட புனலாடமங்கை சிவகாமி யாடமாலாட நுாலாட மறையாட திறையாடமறை தந்த பிரமனாட,கோனாட வானிலகு கூட்டம் எல்லாமாடகுஞ்சர முகத்தனாடகுண்டலம் இரண்டாட தண்டை புலி உடையாடகுழந்தை முருகேசனாட,ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனிஅட்ட பாலகருமாடநரை தும்பை அருகாட நந்தி வாகனமாடநாட்டியப் பெண்களாடவினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளைவிரைந்தோடி ஆடி வருவாய்ஈசனே சிவகாமி நேசனேஎனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!சிவகாமிநேசனாகிய தில்லை வாழ்நடராஜரின் பாடல்கள் பத்தையும் படிப்பவர் வாழ்வில் கர்மவினை ஓடும். ஆனந்தம் கூடும்.