குழந்தை வரத்துக்கு பாட்டு
UPDATED : நவ 12, 2017 | ADDED : நவ 12, 2017
ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். இந்த வழிபாட்டில் குழந்தை இல்லாத பக்தர்கள் கலந்து கொள்வர். நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமம், நாகராஜாவிற்கு மஞ்சள் பொடி, கற்பூரம் வழங்க வேண்டும்.