உள்ளூர் செய்திகள்

அண்ணன் தம்பிக்காக சகோதரிகளின் கடமை

நாக பஞ்சமி மற்றும் கருடபஞ்சமி தினம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் (ஆக.7) வருகிறது. இந்த நாளில் சகோதரிகள், சகோதரர்களின் நல்வாழ்வு கருதி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில், ஒரு பெண்ணின் ஐந்து சகோதரர்களை பாம்பு ஒன்று விரட்டி விரட்டி தீண்டி அவர்களைக் கொன்று விட்டது. பெற்றவர்களை ஏற்கனவே இழந்து விட்ட அந்தப் பெண் அனாதையாகி விட்டாள். அவள் ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பெருமாளை மனதில் எண்ணி தன் சகோதரர்கள் தனக்கு மீண்டும் வேண்டும் என்று கதறியழுதாள். அவளது மனம் ஒன்றிய வேண்டுதலால் இரக்கப்பட்ட திருமால், அந்த சகோதரர்களை உயிர் பிழைக்கச் செய்தார். பஞ்சமி என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணின் பெயரால் இந்த நாளுக்கு நாக, கருட பஞ்சமி என்று பெயர் வந்தது. அன்றுமுதல், அண்ணன், தம்பிகளின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அனுஷ்டிக்கும் நிகழ்வாக இது மாறியது. அன்று பகலில் மட்டும் சாப்பிடாமல், திருமாலுக்குரிய பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லி பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.