உள்ளூர் செய்திகள்

ஒற்றுமையாய் வாழ ஆடிப்பெருக்கன்று நீராடுங்க!

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகர் கோவில் உள்ளது. இங்கு நூபுர கங்கை தீர்த்தத்தில் ஆடியில் நீராடுவர். பகையால் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சமாதானம் ஆன பின், இங்கு நீராடி, இனி பிரிவதில்லை என உறுதியெடுப்பர். ஆடிப் பெருக்கன்று புனிதநீராடினால், குடும்ப ஒற்றுமை சிறக்கும். இத்தீர்த்த நீர் சுவை மிக்கது. நோய் போக்கி புத்துணர்ச்சி தரும் அருமருந்தாக நூபுரகங்கை விளங்குகிறது. ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு திருநாள் வருகிறது.