உள்ளூர் செய்திகள்

உயர்த்துவதில் உயர்ந்தவர்

விநாயகரின் பக்தர்களில் முதன்மையானவர் அவ்வையார். கணபதி உபாசகியான அவர், யோக சாஸ்திர அடிப்படையில் பாடியது விநாயகர் அகவல். ஒருமுறை சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் புறப்பட்டனர். அவ்வையாரை உடன் அழைத்துச் செல்ல விரும்பி, உடனே கிளம்புமாறு அவசரப்படுத்தினர். ஆனால், அந்த சமயத்தில் விநாயகரை வழிபட்டுக் கொண்டிருந்த அவ்வையார் வர மறுத்ததோடு, 'கணபதியே கைலாசம்' என்று சொல்லி பூஜையைத் தொடர்ந்தார். அவரின் பக்தியைக் கண்டு வியந்த விநாயகர் நேரில் தோன்றி, துதிக்கையால் தூக்கிச் சென்று ஒரு நொடியில் கைலாயத்தில் சேர்த்தார். அவ்வையாருக்குப் பின்னரே, சுந்தரரும், சேரமான் பெருமாளும் அங்கு வந்து சேர்ந்தனர். தன்னை முழுமையாக நம்பியவர்களை, ஒரேயடியாக தூக்கி உயர்த்துவதில் விநாயகருக்கு நிகரானவர் வேறு யாருமில்லை.