சுவாதி தான் சூப்பர் ஸ்டார்
UPDATED : ஏப் 21, 2017 | ADDED : ஏப் 21, 2017
திருமணம் நடத்த உயர்ந்த நட்சத்திரம் சுவாதி. நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரமான இதில் திருமணம் நடத்தினால் மணமகள் கணவரிடம் கோபித்துக் கொள்ள மாட்டாள். புகுந்த வீடு, பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பாள். மாமியார், நாத்தனார் என அனைவரிடமும் அன்புடன் பழகுவாள். பிறந்தவீட்டைப் போலவே புகுந்த வீட்டிலும் சந்தோஷமாக இருப்பாள். அவள் கண்களில் தூசி விழுந்தால் ஒழிய, கண்ணீர் வர காரணம் இருக்காது. இந்த 'சூப்பர் ஸ்டார்' குறித்த தகவல், முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியாரின் 'குறைஒன்றுமில்லை' என்னும் நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.