உள்ளூர் செய்திகள்

அந்நாள் பொன்னாள்!

ஓவியர் சங்கர் என்பவர் 1947ல் திருவிடைமருதுாரில் தங்கியிருந்த காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க சென்றிருந்தார். பழங்கள் சமர்பித்து ஆசி பெற்ற அவரிடம், ''உன் சொந்த ஊர் எது?'' எனக் கேட்டார் மகாசுவாமிகள். “காரத்தொழுவு” (திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார கிராமம்) என்றதும், ''அந்த இடம் யாகம் நடந்த புனித இடமாச்சே...'' என்றதோடு, ''பாண்டவர்கள் வனவாச காலத்தில் அமராவதி கரையோர மருத வனத்தில் தங்கினர். அங்கு தர்மர் பசுக்களை கட்டி வைத்த இடமே காரத்தொழுவு'' என விளக்கினார் மகாசுவாமிகள். இதைக் கேட்டு மெய் சிலிர்த்ததோடு, சுவாமிகளை தரிசித்த நாளை பொன்னாளாக கருதினார்.