உள்ளூர் செய்திகள்

காணாமல் போன சபதம்

திருமலைநாயக்கர் மதுரையை ஆட்சி செய்த போது அரசுப்பணியில் இருந்தவர் அழகிய மணவாளதாசர். இவருக்கு பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பக்தரான இவர், ஸ்ரீரங்கம் தவிர்த்த வேறெந்த தலத்திலுள்ள பெருமாளையும் வழிபடுவதில்லை என சபதம் செய்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில்,'அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை (திருப்பதி ஏழுமலையான்) பாட மாட்டேன்' என்றும் கூறினார். இந்நிலையில் மணவாளதாசர் கண்டமாலை என்னும் நோயால் அவதிப்பட்டார். தவறுக்கு மனம் வருந்தி திருப்பதி ஏழுமலையானின் திருவடியைச் சரணடைய நோய் மறைந்தது. அதன் பின் சபதத்தை கைவிட்ட தாசர், திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை என்னும் பாடல்களை பாடினார்.