திருமயம் கோவில் சிறப்பு
UPDATED : மார் 24, 2017 | ADDED : மார் 24, 2017
அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா, சிவன், திருமால், பிரம்மா என்னும் மும்மூர்த்திகளும் தனக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டுமென தவம் செய்தாள். அதன் பயனாக விஷ்ணு அம்சமாக தத்தாத்ரேயர், சிவ அம்சமாக துர்வாசர், பிரம்ம அம்சமாக சந்திரன் ஆகியோர் பிறந்தனர். துர்வாசர் சிவலோகத்திற்கும், தத்தாத்ரேயர் இமய மலைக்கும், சந்திரன் சத்தியகிரிக்கும் சென்றனர். சந்திரன் விஷ்ணுவை தியானித்து வந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த விஷ்ணு, வாமன அவதார கோலத்தில் காட்சி தந்தார். அவ்வாறு காட்சியளித்த தலம், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆகும்.