மூன்று தலைமுறைக்கான திதி
UPDATED : ஜூலை 27, 2014 | ADDED : ஜூலை 27, 2014
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படுவது 'நாந்தி சிரார்த்தம்'. அதாவது தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை, இந்த மூவரின் மனைவிகள், தாய் வழியிலும் இதே வகையில் மூவரும், அவர்களின் மனைவிகளுமாக உள்ள முன்னோர்களை 'சோபன பித்ருகள்' என்று குறிப்பிடுவர். இவர்களின் ஆசியால் குடும்பத்தில் மங்களமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சி நம் வீட்டில் நடத்தும் சமயத்தில், பிதுர்லோகத்தில் இருந்து ஆசியளிப்பதற்காக இவர்கள் வீடு தேடி வருகிறார்கள். அவர்களுக்கு உடை, உணவுஅளித்து வழிபடும் செய்யும் சடங்கே 'நாந்தி சிராத்தம்' ஆகும்.