கல்வியில் சிறக்க...
UPDATED : ஜூலை 19, 2022 | ADDED : ஜூலை 19, 2022
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரெழுந்துாரில் பிறந்தவர் கம்பர். திருவெண்ணைநல்லுார் சடையப்பரால் ஆதரிக்க பெற்றவர். தமிழில் ராமாயணம், சரஸ்வதி அந்தாதி போன்ற நுால்களை இயற்றியவர். கலைவாணியின் திருவருளைப்பெற்றவர். குழந்தைகள் பிறந்த தினத்தில் அம்மன் கோயிலுக்கு சென்று கம்பரை நினைத்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.