உள்ளூர் செய்திகள்

செதுக்கப்படாத சிலை

'சப்த' என்றால் ஏழு, 'விடங்கம்' என்றால் 'உளியால் செதுக்கப்படாமல் உருவான சிலை' என்பது பொருள். அசுரர்களை அழிப்பதில் தனக்கு உதவியாக இருந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஏழு சிவலிங்கங்களைப் பரிசளித்தார் இந்திரன். அவையே திருவாரூர் தியாகராஜர் கோயிலிலுள்ள வீதிவிடங்கர், திருநள்ளாறு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலிலுள்ள நகர விடங்கர், நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலிலுள்ள சுந்தர விடங்கர், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலுள்ள அவனி விடங்கர், எட்டுக்குடி அருகிலுள்ள திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயிலிலுள்ள நீலவிடங்கர், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலிலுள்ள புவனி விடங்கர், திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயிலிலுள்ள ஆதிவிடங்கர் என்னும் பெயரில் உள்ளன. இத்தலங்களை வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெருகும்.