செல்வம் தரும் வன்னி
UPDATED : அக் 29, 2020 | ADDED : அக் 29, 2020
மகாராஷ்டிர மக்கள் வன்னி மரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். விஜயதசமியன்று வன்னி மர இலைகளை பறித்து பெரியவர்களின் பாதத்தில் வைத்து வணங்குவர். 'இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி பெரியவர்கள் ஆசியளிப்பர். அம்மன் கோயில்களில் வன்னிமரத்திற்கு சிறப்பு பூஜை நடக்கும். இதை தரிசித்தால் செல்வம் பெருகும்.