கல்வி தெய்வம் வியாசர்
UPDATED : ஜூன் 02, 2017 | ADDED : ஜூன் 02, 2017
மகாபாரதத்தை எழுதியவர் வேத வியாசர். ரகுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரனான இவர் பராசர முனிவரின் மகன். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் 'கிருஷ்ண துவைபாயனர்'. இதற்கு 'இருளான தீவில் பிறந்தவர்' என்பது பொருள். ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என நான்கு வேதங்களையும் வகுத்துக் கொடுத்ததால் 'வியாசர்' என்னும் காரணப் பெயர் உண்டானது. இவரது குருபூஜை ஆனி பவுர்ணமியன்று (ஜூலை 9) கொண்டாடப்படுகிறது. கல்வி தெய்வமான வியாசரை இந்நாளில் வழிபட்டால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வியாசருக்கு தனி சன்னதி உள்ளது.