எதன் முன்பு விழிக்கலாம்
UPDATED : ஜூன் 15, 2017 | ADDED : ஜூன் 15, 2017
மனிதன், ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட விரும்புகிறான். என்றாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால், 'இன்று யார் முகத்தில் விழித்தேனோ?' என்று சலித்துக் கொள்கிறான். காலையில் எழுந்ததும் மந்திர ரேகைகளுடன், மகாலட்சுமி வாசம் செய்யும் நமது இரு உள்ளங்கைகள், மஞ்சள், துளசி, பால், நெய், சந்தனம், பழங்கள் மற்றும் தேன் முன்பு விழிக்கலாம். இதனால், அன்றைய பொழுது சிறப்பாக அமையும்.