உள்ளூர் செய்திகள்

தண்ணீர்... தண்ணீர்...

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது ஒருவர் “நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்...அங்கு போகாமலேயே கடவுளை உணர முடியாதா” எனக் கேட்டார். அவரிடம் “ தண்ணீர் கிடைக்குமா” என்று விவேகானந்தர் கேட்க அவரும் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார். “தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த செம்பு” என்றார் விவேகானந்தர். அவர் குழப்பத்துடன் “செம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்” என்றார். அவரிடம் “ஆம் சகோதரனே... தண்ணீர் கொண்டு வர செம்பு தேவை. அது போல கடவுளுடன் உறவாடவும் அவரைப் பற்றி சிந்திக்கவும் தனி இடம் வேண்டும். அதுவே கோயில். அதனால் தான் கோயில் வழிபாடு மிக அவசியம் என்கிறேன்” என விளக்கினார்.