உள்ளூர் செய்திகள்

உங்க நட்சத்திரம் எந்தக் கிழமையில் வருது?

நீங்கள் பிறந்த ஆங்கில தேதியன்று என்ன தமிழ் மாதம், நட்சத்திரம் வருகிறது என பார்த்துக் கொள்ளுங்கள். அதே தமிழ் மாத ஜென்ம நட்சத்திரம், ஒரு ஆண்டில் என்ன கிழமையில் வருகிறதோ, அந்தக் கிழமையைப் பொறுத்து அந்த ஆண்டுக்குரிய சிறப்பு பலனைத் தெரிந்து கொள்ளலாம். முகூர்த்த சிந்தாமணி என்ற நூலில் இதுபற்றிய குறிப்பு உள்ளது.உதாரணமாக நீங்கள் 15.9.1956ல் பிறந்திருந்தால், அன்றைய தமிழ் தேதி ஆவணி 31. நட்சத்திரம் உத்திராடம். அதே நட்சத்திரம் இந்த ஆண்டில் ஆவணி 18 (செப்.3) ஞாயிறு அன்று வருகிறது. இவ்வாறாக கிழமையைக் கணக்கிட்டு, அடுத்த பிறந்தநாள் வரையான பலனை அறியலாம்.ஞாயிறு - நீண்ட தூர பயணம். திங்கள் - விழா, விருந்தில் பங்கேற்றல் செவ்வாய் - பணியில் தாமதம் புதன் - கல்வி,தொழில் முன்னேற்றம் வியாழன் - நகை, ஆடை சேர்க்கை வெள்ளி - குடும்ப ஆதரவு, தம்பதி ஒற்றுமைசனி - உடல்நலனில் அக்கறை தேவை. செவ்வாய், சனிக்கிழமைகளில் ஜென்ம நட்சத்திரம் வந்தால் பரிகாரமாக இஷ்ட தெய்வத்தை வணங்கி நலன் பெறலாம்.