உள்ளூர் செய்திகள்

நெய்தேங்காய் ஏன்?

சபரிமலை ஐயப்பன் தனது 12 வது வயதில் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக் காண வளர்ப்புத் தந்தை பந்தள மன்னர் அடிக்கடி செல்வார். அப்போது தின் பண்டங்கள் கொண்டு செல்வார். மலைப்பாதையில் நீண்ட நாள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டம் கொண்டு செல்வார். பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்லும் பழக்கம் ஏற்பட்டது.