ஆயுள் அதிகரிக்க எமதர்மனை வழிபடுங்க!
UPDATED : மே 04, 2017 | ADDED : மே 04, 2017
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் பிறந்தார். இதே நாளில் தான் எமதர்மனும் பிறந்தார். இந்நாளில் எமதர்மனை வழிபட்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம். எமதர்மனுக்கு திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில், திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோவில்களில் சன்னதிகள் உள்ளன. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை சாலையில் 36 கி.மீ., தூரத்திலுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமதர்மனுக்கு கோவில் உள்ளது.