உள்ளூர் செய்திகள்

திருப்பாவையின் பொருள்

கலியுகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், 'மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன்' என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை தானும் மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த பெருமாளின் சன்னிதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' எனத் துவங்கி 'வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை' என முடியும் முப்பது பாடல்களைப் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று. 'திரு' என்றால் 'மரியாதைக்குரிய'. 'பாவை' என்றால் 'பெண்'. நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது 'திருப்பாவை' ஆயிற்று.