முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!
UPDATED : அக் 20, 2017 | ADDED : அக் 20, 2017
கிராமங்களில் திருவிழாவின் போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப் பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானைஉடன் வீதியுலா செல்வார். பக்தர்கள் அப்போது, தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கவும் போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.