அம்பிகை அருள்புரிவாள்
* மகாசக்தி அன்னையே! உன்பாதங்களே துணை என்று எண்ணி வழிபட்டால் நெஞ்சில் நிம்மதி உண்டாகும்.* நெஞ்சிலே கவலை என்னும் பயிரை உண்டாக்கி, அச்சத்தோடு வாழ்வது அறியாமை. தஞ்சம் என்று சக்தியின் திருவடிகளை சரண் அடைவோம்.* நன்மையும் தீமையும் நிறைந்த உலகில், நமக்கு நலத்தை மட்டுமே பராசக்தி தருவாள். அல்லல் நீக்கி நம்மை தேவர்களைப் போல வாழவைப்பாள். அதனால் 'ஓம் சக்தி' என்று ஜபித்தபடியே பணியாற்றுங்கள்.* பராசக்தியால் வாழ்வு நிலை வளமாகும். அன்னையின் அருளால் ஊழ்வினை நீங்கி உயர்வு உண்டாகும். * இந்த உலகங்கள் அத்தனையையும் படைத்தும், காத்தும் அருள்செய்கின்ற மகாசக்தியை வணங்கினால் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். * 'பராசக்தியே!' என்று மனதார துதிப்பவர்கள், அவளது உண்மை வடிவத்தைக் கண்டு மகிழ்வார்கள். அவர்களுக்கு மேன்மையான வாழ்க்கை உண்டாகும்.* மாதாவே! என்னுயிரே! பராசக்தித்தாயே! நீயே இந்த உலகமெல்லாம் நிறைந்திருக்கிறாய். ஆதாரமாய் திகழ்பவளே! உன்னைப்பணிந்து நல்வாழ்வு பெறுவோம். பாரதியார்