நியாயத்தை துணிந்து செய்
* உண்மையான பக்தி இருந்தால் தான் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும்.* ஆயுள், ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகிய நான்கையும் தெய்வத்திடம் வேண்டி பெற வேண்டும்.* அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வஒளியைக் காணலாம். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையான மோட்சம் கிடைக்கும். * வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற, அவன் சம்பாதிக்கும் குணங்களில் மேலான குணம் பொறுமை.* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு, நியாயமான செயல்களைத் துணிந்து செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.* நம்முடைய விருப்பம் போல் உலகம் செயல்படவில்லை, தெய்வத்தின் விருப்பம் போல் தான் உலகம் இயங்குகிறது.* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானுமே தெய்வம் என்று வேதம் கூறுகிறது.-பாரதியார்(இன்று பாரதியார் பிறந்த தினம்)