மலர்ந்த முகம் வேண்டும்
UPDATED : மே 19, 2014 | ADDED : மே 19, 2014
* கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால், எந்த செயலையும் சரிவர செய்ய முடியாது.* உழைப்பில் தான் சுகமிருக்கிறது. இதை அனுபவத்தால் மட்டுமே ஒருவரால் உணர முடியும்.* மற்றவர்கள் உள்ளத்தில், நம்மைப் பற்றி பொய்யான மதிப்பீடு உண்டாவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த பார்வையுடன் இருப்பது அவசியம். * உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால் அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.- பாரதியார்