மனவலிமை வேண்டும்
UPDATED : மார் 10, 2014 | ADDED : மார் 10, 2014
* மனம் கலங்கிவிட்டால் புத்தியும் கலங்கி விடும். மனதை வலிமை பெறச் செய்வதே சிறந்த யோகம்.* மனதை எப்போதும் தைரியம் என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்தி வையுங்கள்.* உலக வாழ்வில் உழன்று கொண்டு இருந்தாலும், சஞ்சலத்திற்கு சிறிதும் இடம் தராமல் மனதைக் கட்டப் பழகுங்கள். * எப்போதும் மனதில் மாறாத இன்பம் நிலைத்திருக்கட்டும். இதுவே மனித வாழ்வின் சிறந்த பயன்.* நீதி, தர்மம், அன்பு, சமாதானம், சமத்துவம் போன்ற உயர்பண்புகள் நிலையான இன்பத்திற்கு வழிவகுக்கும். - பாரதியார்