உள்ளூர் செய்திகள்

மகிழ்வுடன் வாழப்பழகு!

* வருவது வரட்டும் என்று துணிவுடன் செயலாற்று. அகந்தையை ஒழித்து விடு. மனமகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள். * அடக்கப்படாத மனம், மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் செல்லும் தன்மை கொண்டது. * மூடநம்பிக்கையைத் துாக்கி எறிந்துவிடு. மரணமே எதிர் வந்தாலும் பலவீனத்திற்கு இடம் கொடுக்காதே. * முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் ஆற்றல் தானாக உன்னை வந்தடையும். * நன்மை செய்வது ஒன்றே நோக்கமாக இருக்கட்டும். ஆனால், உன் பெயரை உலகிற்கு பறை சாற்றாதே. - பாரதியார்