உள்ளூர் செய்திகள்

சுயபுத்தியுடன் வாழுங்கள்

* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயமே என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.* செல்வம் என்பது பணம் மட்டுமன்று. அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவையும் செல்வம் தான். * செல்வம் ஒருவருக்கொருவர் குறையும் போது பொறாமையும், வஞ்சனையும் மனதில் எழுகின்றன. * நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்து விட்டால் அவனுக்கு மிகுந்த வலிமை உண்டாகி விடுகிறது. * தெய்வமே சரணம் என்று இருப்பவர் உள்ளத்திலே சோம்பல் உண்டாகாது. அவர்கள் எப்போதும் உழைக்கச் சித்தமாயிருப்பர். * நல்ல விளக்கிருந்தாலும் பார்வை இருந்தால் தான் காண முடியும். நாலுபேரின் துணையிருந்தாலும் சுயபுத்தி இருந்தால் தான் மனிதன் வாழ முடியும்.* பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது. இதைக் கருதி தான் ஏழைக்கு அன்னம் இடுவதை உத்தம தர்மம் என்றனர்.- பாரதியார்