அன்பே வாழ்வின் ஆதாரம்
UPDATED : மே 21, 2017 | ADDED : மே 21, 2017
*உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தியாக இருக்கிறது.*பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே வாழ்வில் சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.*வீட்டிலும் வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.*அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராகி விடுவான்.- பாரதியார்